வழிகாட்டும் மணிமொழியம்

 குறள் நிலா முற்றம்

ஆசிரியர் ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன் 

தோரண வாயில்

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

எனப் பாரதியார் பாடியது வெறும் புனைந்துரை இல்லை. வள்ளுவரது நெஞ்சமும் உலகோர் வாழ்வியல்பும் ஒரு தராசில் சம எடையாக நிறுத்தளந்தது போல், ஒரு சீராக நிற்பதைக் கண்டறிந்து கூறிய புகழுரை. வள்ளுவமே சமுதாயம் முழுவதற்கும் உரிய சரியான வாழ்க்கை விளக்கம் என அறுதியிட்ட தீர்ப்புரை.

திருவள்ளுவர் தமிழ்நாட்டிலே பிறந்தார். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மண்ணோடும் மரபோடும் ஒன்றிக்கலந்து உருவாகியிந்த பண்பாட்டுச் சிந்தனைகளால் உரம் பெற்று வளர்ந்தார். அந்த வளர்ச்சியின் பயனாகக் குறட்பாக்களை வித்துக்களாக்கி ஈந்து உதவினார். அந்த வித்துக்கள் உலகின் எந்தச் சமுதாயப் புலத்தினும் ஊன்றிச் செழித்தோங்கும் இயல்புடையவை: அந்த முத்துக்கள் ஒவ்வொருவருக்கும் அணி கலனாக அழகு சேர்க்கக் கூடிய தனிச் சிறப்புடையவை. </p?

வள்ளுவர் ஒரு நாட்டில் பிறந்தவர் எனினும் உலகச் சிந்தனையாளர். ‘மக்கள் எல்லாரும் ஒரு குலம் : மாநிலம் முழுவதும் ஒரு வீடு’ எனும் பரந்த நோக்குடையவர். கிரேக்கத்து அரிஸ்டாட்டிலைப் போல – பண்டைய இந்தியாவின் ஆதி மனுவைப் போல – அகிலப் பார்வையுடையவர் : அறிவியல் – ஆன்மிகம் – மார்க்சியம் – காந்தியம் எனப் பல்துறைச் சார்புப் போக்கினர்க்கும் பொது நலம் கூறும் சால்புடையவர்.

நூல்கள் இரு வகைப்படும் என அறிஞர் கூறுவர். எழுதப்பட்ட காலத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்வன முதல் வகை : நாம் வாழும் காலத்திற்குத் தாமும் உடன் நின்று வழி காட்டுபவை இரண்டாம் வகை.

திருக்குறளில் முதல் வகைப் பாங்கு ஓரளவிற்கும் இரண்டாம் நிலைப்பேறு பேரளவிலும் இணைந்திருப்பதாக அறிஞர்கள் அரங்கு கூட்டிப் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள் வற்றாத ஊற்றாக, வளங்குன்றாத சுரங்கமாகப் பயன் தந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும் திருக்குறளை வாழ்க்கை விளக்கமாக ஏற்போரிடம் ஓர் ஐயம் அவ்வப்போது ஏற்பட்டு வருவதையும் மறுப்பதற்கில்லை.

 “எல்லாப் பொருளும் இதன்பால்உள, இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்”

என அன்று பாடிய திருவள்ளுவ மாலை இன்றைக்கும் வாடாத மாலை ஆகுமா? எனக் கேட்டு, தமது வாழ்க்கைப்போக்கிற்கெல்லாம் திருக்குறள் துணையாக வந்து விடுமா? அவரவர் வாழ்க்கைக்கெல்லாம் வள்ளுவம் உதவுமா? என்பதோடு ஒவ்வொருவர் வாழ்வுக்கும் வள்ளவம் வழி காட்ட வேண்டும் எனும் ஆர்வமும் தலைÀக்கி நிற்கிறது.

வள்ளுவத்தை மட்டுமல்ல, சமயப் போதனைகள், மார்க்சியம், காந்தியம் ஆகிய உண்மைகள் அனைத்தையும் வாழும் காலம் எனும் உரைகல்லில் உரசிப் பார்த்து எடை போட்டறியவே விழைகின்றனர்.

காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடைமாற்ற நாகரிங்களைப் போன்றவை :அடிப்படை உண்மைப்பண்புகள் உயிரைப் போன்றவை என்பர் அறிஞர். 

‘காந்தியக் கதராடையே சோபிதம்’ எனப் பாடிய காலம் சடுதியில் மாறியுள்ள சூழலில், வள்ளுவப் பழமை உடை இன்றைய புதுயுகத் தேவைக்கெல்லாம் பொருந்துமா எனக் கேட்டுப் பார்ப்பதில், எடைபோட்டுப் பார்ப்பதில் தவறில்லை.

‘நாம் வாழும் இந்தக் காலத்திற்கு வள்ளுவம் வழி காட்டுமா? என்பது பயனுள்ள கேள்வியே. ஆகும்.

இக்கேள்விக்குப் பலரை ஒருங்கு கூட்டி, விவாதப் பொருளாக இதை முன்வைத்துப் பயன்தர மதுரை வானொலி புதுமையான நிகழ்ச்சிகளை ஒரு சரமாகத் தொடுக்க முனைந்தது. நிகழ்ச்சிகளை வானொலி அரங்கிலிருந்தே ஒலிபரப்பும் பழைய முறையை மாற்றி ‘வாசலுக்கு வரும் நேசக்கரங்களை’ நீட்டி நிகழ்ச்சிகளை அமைக்கும் புதுமையை அரங்கேற்றியது. அதில் ஒன்று நிலா முற்றம் 

‘நீலவான் ஆடைக்குள் ஒளி மறைந்து
நிலாவென்று முகம் காட்டும்’

வளர்பிறை, மாதந்தோறும் முழுமதியாகி வானக் காட்சி தருவது. வீட்டுவெளியில் வந்து அண்ணாந்து பார்த்து மகிழவோ வியக்கவோ நமக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை – விருப்பம் இருப்பதில்லை.

வீட்டு அறைக்குள் அமர்ந்து உண்ணும் சாப்பாட்டை நம் வீட்டு முற்றத்திலேயே பிள்ளைகளுடன் குடும்பத்தாருடன் ஒன்றாய் அமர்ந்து குலவிப் பேசி அதை நிலாச் சோறாக உண்பதிலும் நாட்டம் கொள்வதில்லை! இயற்கையை ரசிக்க எங்கெல்லாமோ பயணம் போகிறோம். வீட்டிற்குள்ளே – வீட்டருகே வலம் வரும் விந்தைகள் கூட நம் கண்ணிலோ மனத்திலோ படுவதில்லை : படிவதில்லை.

திருக்குறள் சிந்தனையைப் பலரது கருத்திலும் படரச் செய்யக் கருதிய வானொலி நிலையம் அதை நிலா முற்ற விருந்தாக, அரங்காகக் கூட்டியது.

அந்த அரங்க அமைப்பினை என் வீட்டு முற்றத்தில் நிலா விருந்தாக்கிட நான் விழைந்தேன். மதுரைத் தமிழ் அறிஞர் களையும் சிந்தனையாளர்களையும் அழைத்து வர வானொலியார் இசைந்தார்.

என் இல்லத்து விரிந்த முற்றத்தில் திருக்குறள் நிலா முற்றம் கூடியது.

‘குறள் நெறிகள் நம் காலத்திற்குப் பொருந்துமா? எனும் தலைப்பில் விவாத மேடைச் சிந்தனைகளைத் தொகுத்து ஒரு சரமாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.

இளமை பருவம் முதல் குறட்பாக்களில் சிந்தை மயங்கி வளர்ந்து குறள் கருத்துக்களைச் சமுதாயப் பொது உடைமை ஆக்கிப் பரப்பும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ யின் பொதுச் செயலாளர் பொறுப்பேற்றிருந்த எனக்குக் குறள் பற்றிய அறிஞர் பெருமக்களின் சிந்தனைகளோடு இணையும் இனிய வாய்ப்பு இது எனக் கருதினேன்.

குறள் நிலா முற்றம் அரங்கு கூடியிருந்தது

திருக்குறள் பேரவையின் தமிழ்நாட்டமைப்பின் துணைத்தலைவர், செயலாளர், பல கிளைப் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள, புலவர்கள், அரசு உயர்நிலை அலுவலர்கள், சமூக இயக்கச் சிந்தனையாளர்கள், நாட்டுநலத் தொண்டர்கள் என ஒரு பிரதிநிதித்துவப் பேரணி போலக் கூடி இருந்தது அவை.

வானத்திலே முழுமை நிலா, அழகு நிலா மேலெழுந்து கொண்டிருந்தது. நிலா முற்ற அரங்கில் குறள் நெறிச் சிந்தனைகறம் அறிஞர்களிடையே உலா வரத் தொடங்கின.இந்த நிலா முற்ற விருந்தில் குறள் அமுதம் அருந்திட உங்களை அன்படன் அழைக்கின்றேன்.

இந்நூல் சிறப்புற வெளிவரப் பெரிதும் துணையாக இருந்த பேராசிரியர். சு.குழந்தைநாதன், முன்னவர். இரா.மோகன். ஆகியோர்க்கும், அணிந்துரை நல்கிய வணக்கத்திற் குரிய தவத்திரு பொன்னம்பல அடிகளார், மூதறிஞர். முனைவர். தமிழண்ணல் ஆகிய சான்றோர்களுக்கும், அழகுற அச்சிட்டும் வெளியிட்டும் பெருமை சேர்த்த நல் உள்ளம் கொண்ட, மீனாட்சி புத்தக நிலைய திரு.செ. முருகப்பன் அவர்களுக்கும், இதய நன்றியை காணிக்கையாக்குகின்றேன்.

ந.மணிமொழியன்

பொதுச்செயலாளர், உலகத் திருக்குறள் பேரவை

 

குறள் நிலா முற்றம்

ஆசிரியர் ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன்  

நிலா முற்ற விருந்துக்கு வருக!


வான வீதியில் திங்கள்தோறும் ஒருநாள் முழுநிலா வலம் வருகிறது: வீடுதோறும் முற்றமும் உள்ளது. ஆனால் – இவ்விரண்டையும் பயன்கொண்டு முழுநிலாவொளியில் வீட்டுமுற்றத்தில் குடும்பத்தவர் எல்லாம் ஒருங்கே அமர்ந்து உணவுண்டு மகிழும் காட்சிகள் எல்லாம் முற்றிலும் பழங்கதைகள் ஆகிவிடவில்லை. அவை – நவயுக உணவு விடுதிகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புக்களிலும் மீண்டும் அறிமுகமாகிய வருகின்றன.

உணவுப் பரிமாற்ற நிலா விருந்தாக நமது பண்பாட்டுடன் இணைந்திருந்த இதனை – உணர்வுப் பரிமாற்ற நினைவு விருந்தாக – நல்சிடக் கருதியது மதுரை வானொலி நிலையம். இலட்சியக் சிந்தனைகள் மக்களை எளிதில் சென்றடைய – ‘வாசலுக்கு வரும் நேசக்கரம்’ போன்ற புதுப்புதுத் திட்டங்களை அரங்கேற்றி வரும் வானொலி வரிசையின் மற்றொரு புதுமைப் படைப்பு “நிலா முற்றம்”

‘இலக்கியம் பேசி மகிழ்வதிலும்’ எத்தனையோ வகைமைகள் உண்டு. உரையரங்கு, கருத்தரங்கு, பட்டிமன்றம், வாதம் – விவாதம், வழக்காடு மன்றம்…. என்றெல்லாம் நீண்டு வரும் பட்டியலில் இப்போது சிறப்பிடம் பெற்று வருவது ‘நிலாமுற்றம்’. வான வீதியில் நிலா, உலா வரும்போது – அன்பர்கள் முற்றத்தில் அரங்கமைத்து – தம் சிந்தனைகளை மனம்விட்டுப் பேசி – பிறருடன் பகிர்ந்து கொள்ளச் சம உரிமையளிக்கும் புதிய விருந்தோம்பல் இது. 

‘விருந்தோம்பலுக்கெனத் தனி அதிகாரமே வகுத்த – வள்ளுவத்தையே – பொருளாகக் கொண்டு – குறள் நிலா முற்றம் காட்ட முன்வந்தது, மதுரை வானொலி நிலையம். இம்முற்றத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பொறுப்பினை உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் எனும் உரிமையுணர்வுடன் நான் ஏற்று நடத்திட இசைந்தது மதுரை வானொலி நிலையம். மாதம்தோறும், கடைசிச் சனிக்கிழமை மாலையில் – திருக்குறள் சிந்தனை அரங்கில் பங்கேற்றுப் பரவசமூட்டிய பேராசிரியர்கள். அன்பர்கள் பொதுமக்கள் என Áற்றுக்கும் மேற்பட்டோர் குறள் நிலா முற்றத்திற்கு அழைக்கப் பெற்றனர்.

திருக்குறளுக்கு அது இயற்றப்பட்ட நாள்முதல் எத்தனையோ விழாக்கள் உலகெங்கிலும் எடுக்கப்பெற்றுப் புதுப்புது நலன்கள் காணப் பெறுகின்றன. பாரத மணித்திரு நாட்டின் தேசிய இலக்கியம் எனும் வரம்பு கடந்த – உலக மக்களின் ஒப்பற்ற வழிபாட்டு Áலாகவும் – பொதுமை Áலான குறளே போற்றப்பட்டு வருகிறது. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதை நிலைநாட்டி நாளும் புதுப்பாதை காட்டியும் வருகிறது. தென் குமரியிலிருந்து தில்லி வரை விடப்பட்டுள்ள திருக்குறள் விரைவு ரயிலில் பெட்டிகள்தோறும் குறள் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை – திருக்குறள் காலப்பெட்டகம் எனும் அறிவுப்பயணத்தை நிறுவுகிறது: நினைவூட்டுகிறது.

இக்கருத்துப் பெட்டகத்தைத் திறந்து விருந்தளிக்கும் சிந்தனை வட்டமாகக் ‘குறள் நிலா முற்றம்’ ஏற்பாடாயிற்று. மூன்று அமர்வுகளுக்கு மேல் பலமணி நேர விவாத மேடையாக விறுவிறுப்புடன் நடைப்பெற்ற இம் முற்றத்தில் பலதுறை வித்தர்களும் ஆர்வமுறப் பங்கேற்றனர். குறள் நிலா முற்றச் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும்  பொறுப்பு – எனக்கு அளிக்கப் பெற்றது. இலக்கிய ரசனையில் ஒரு புதிய உத்தியான இதில் பங்கேற்றார் காழ்ப்புணர்வு இல்லாமல். தத்தமது கருத்துக்களை உரிமையுடன் பரிமாறிக் கொண்டனர். அங்கு இடைவேளையில் பரிமாறப் பெற்ற உணவைவிட, இக்கருத்துப் பரிமாற்றமே என்றும் மாறாச் சுவையாக நீட்டித்தது.

இத்தகைய அருஞ்சுவை அமுதத்தை எல்லாம், காற்றோடு கலந்து விடும் கற்பூராமாக்கி விடாமல், நேற்றோடு போன நினைவைப் பார்க்க விடாமல், ஒரு சரமாகத் தொகுக்கும் எண்ணம் வலியுறுத்தப்பட்டது. பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசான்கள் அ.கி. செல்வகணபதி, திரு.மோகன்காந்தி, முனைவர்கள் இரா.மோகன், வல்லரசு, கவிஞர் திரு.கருப்பையா, திரு.அய்யணன் அம்பலம் ஆகியோர் ஊக்கமூட்டினர். “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” நிகழ்ந்தவை எல்லாம், என்றைக்கும் வற்றாத வடிவமைப்பில் நூல்வடிவம் பெற்றுள்ளன. 

‘குறள் நிலா முற்றத்திற்கு ஏற்பாடு செய்து என்றும் குன்றாத இலக்கியப் பணியாற்றிடும் மதுரை வானொலியாருக்கு மனமார்ந்த நன்றி. முற்றத்தில் பங்கேற்ற அன்பர்கள் – அறிஞர்கட்கெல்லாம் நன்றி. மதிப்புரையும் அணிந்துரையும் நல்கிய ஆனறோர்க்கு அடிபரவும் நன்றி.

ந.மணிமொழியன்

ஒருங்கிணைப்பாளர்

இலக்கியம் பேசி

மகிழவோ!

ஆசிரியர் ‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன் 

ஆக்க உரை

“இலக்கியம் பேசி மகிழவோ!” எனும் தலைப்பில் உரையாற்ற வருமாறு மதுரை வானொலி நிலையத்தார் விடுத்த அழைப்பு என் சிந்தனையைக் கிளறி விட்டது. “இலக்கியம் பேசி மகிழ வா!” என என்னை மட்டுமின்றிப் பலரையும் கூவி அழைக்கும் பொது அழைப்பாக என் உணர்வுகளுக்கு வழி காட்டியது.

இளமை முதலே இத்தகைய வழியமைப்புக்களைப் பற்றி நிற்கும் வாய்ப்புக்கள் எனக்குக் கிட்டின. அவற்றைப் பெறற்கரிய பேறுகளாகக் கருதித் தடம் மாறாமல் நடக்க முயன்றேன். அழகப்பர் கல்லூரியில் பொருளாதார முதுகலை கற்றபோதும் என் நினைப்பெல்லாம் உணர்வெல்லாம் திருக்குறளையும் தமிழ் இலக்கியத்தையுமே வலம் வந்தன.

வணிக வாழ்வுக்கு ஆட்பட்டுப் பல்வேறு பொறுப்புகளுக்கு உட்பட்ட போதிலும் என்னுள்ளே இலக்கிய உணர்வுகள் மட்டும் மங்காமலே கனன்று கொண்டிருந்தன. திருக்குறள் பேரவை முதலிய இலக்கிய விழாக்கள், அறிஞர் பெரு மக்களின் அரிய தொடர்புகள் என்பன எல்லாம் அந்த உணர்வுக்கனலை ஓங்கி எரியச் செய்தன. இந்த இலக்கிய எரிமூட்டம் எனக்கு எப்போதும் இதமளித்தே வந்தது.

இலக்கியம் ஆழ்ந்தகன்ற என்றும் நிலைபெற்று வருகிற மனிதப் பண்புடன் தொடர்புடையது: மனிதனுடைய வாழ்வெனும் தத்துவத்திலிருந்து வடி வெடுப்பது: ஒருவரது அனுபவங்களையும் எண்ணங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வழியமைப்பது. அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது நம்மையும் அறியாமலே நமக்குள்ளே ஒருவகைக் கலைத்திறமையை உருவாக்கிட வல்லது.

நாம் அகம், புறம் எனும் ,ருவகை மனத்தோடு வாழ்கிறோம். விழிப்பும் கூர்மையும் உடைய, பொறிகளின் சார்புடைய புற மனத்திற்கு அடிமைப்படுவதே நம் வாழ்வில் பெரும் பகுதியாகப் போகிறது. உணர்ச்சியும் கற்பனையும் கலந்த அகமனதோடு உறவு பூண்டு ஆட்படுவதென்பது மிக அரிதாகவே கிட்டுகிறது. ஆக புற மனங்களில் சமநிலை கண்ட சான்றோர்கள் அருளிய இலக்கியங்களைப் பேசி மகிழும்போதுதான் நமக்கும் ஒருவகைச் சமநிலை அமையும் வாய்ப்பேற்படுகிறது. தோட்டனைத் தூறும் மணற் கேணியாகக் கற்றனைத் தூறும் அறிவு கிட்டுகிறது.

இத்தகைய வாய்ப்பினை வளரும் தலைமுறைக் கெல்லாம் வழங்கக்; காத்திருக்கும் இலக்கியச் செல்வங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. என்றும் வாழும் இலக்கியமான திருக்குறளில் இச் செல்வங்கள், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய,வாழ்வுக் கினிய வளங்களை எல்லாம் ஆக்கித்தர வல்லவையாக விளங்குகின்றன.

பயிலும் போது இன்பம் ஊட்டி, வாழும் முறைக்கு நற்பண்புகளால் வலிமை சேர்க்கும் திருக்குறள் முதலிய இலக்கியங்களைப் பிறரோடு திருக்குறள் முதலிய இலக்கியங்களைப் பிறரோடு பேசி மகிழ்ந்த நாள்கள் பலப்பல. “காற்றில் வைத்த கற்பூரம் போல” இவை போய் விடக்கூடாதே எனக் கருதிய எனது கெழுதகை அன்பர் பேராசிரியர் சு.குழந்தை நாதன். நானும் அறியாமலே அவற்றை முயன்று தொகுத்து வந்தார். சிதறி உதிர்ந்த மலர்களை எல்லாம் என்றும் மணக்கும் மாலையாகக் கட்டித் தந்த பேராசிரியருக்கு உளமார நன்றி பாராட்டுகிறேன.

‘பாளையம் இல்லம்’ அடையாத நெடு வாயில்களைக் கொண்ட செழுங்குடிச் செல்வமனை. தளர்ந்து   வந்தோரையெல்லாம் தாங்கி உயர்த்திய தமிழவேள், பி.டி.ராசன் அவர்களின் அருந்தவர் புதல்வர் அறிஞர் பழனிவேல் ராசனார் – கல்விச் செம்மல்: காழ்ப்பு வெறுப்பற்ற கருணைப் பாங்;கினார். என்னரோடு இலக்கியம் பேசி வழிகாட்டிய அப்பேரறச் செல்வர்- , இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பது எனக்கமைந்த பெரும்பேறு. பழனிவேல் ராசனார்க்கு பணிவார்ந்த நன்றியுடையேன்.

தமிழ் மாமுனிவர்- தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கட்கு ஆயிரமாயிரம் அன்பர் குழாம் உண்டு: அதற்கு அப்பாலும் அடி சார்ந்த அடியவனான என்னைத் திருக்குறளால் பிணித்து அருள்பாலித்து ஆட்கொண்டார். வாழும் சமுதாயத்தையும் வாழ்விக்கும் சமயத்தையும் இரு கண்களாகக் கொண்ட அப்பெருந்தகை-இந்நூலுக்கு ஆசியுரை நல்கத் திருவுளம் கொண்டார். அழகியதொரு அணிந்துரையைத் திறனாய்வாக வழங்கியுள்ளார். தேய்வ நலம் காட்டும் மாமுனிவரின் திருப்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன்.

ஆகரம் வெளியீடுகள் – தமிழ் மக்களுக்கு ஆக்கமிகு நலம் தரும் Áல்களை அணி சேர்த்துப் பரப்பி வருகின்றன. தனி முத்திரையோடு, தரமான நூல்களை வெளியீடுவதையே நோக்காகக் கொண்ட இவ்வெளியீட்டுவரிசையில், எனது படைப்புக்களும் இடம் பெறச் செய்த பேராசிரியர் மீரா அவர்கட்குப் பெரிதும் கடப்பாடுடையேன். இலக்கியம் பேசி மகிழ்வதில் இணையற்ற நலம் காண வருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

ந.மணிமொழியன், மேலாண்மைஇயக்குநர்,

நியூ காலேஜ் ஹவுஸ்,மதுரை -1

3062total visits,5visits today

Pages: 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>