மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மேற்குக் கோபுர வண்ணம் பூசும் பணியை சொந்தமாக எடுத்துச் செய்த பெருமை இவருக்கு உண்டு. தனது பணிக்காலத்தில் அயராது உழைக்கும் பழக்கம் கொண்டிருந்த மணிமொழியார் பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தார். அவற்றில் குறிப்பிடும் படியானவை இவை.

 1. உலகத் திருக்குறள் பேரவையில் அகில உலக பொதுச்செயலாளராக பணியாற்றினார்.
 2. அகில உலகத் திருக்குறள் ஆராய்ச்சிக் கழகத்தில் நிர்வாக அறங்காவலராக பணியாற்றினார்.
 3. மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், மேலாண்மை இயக்குனர்.
 4. சென்னை வீ. கே.கே. ஹோட்டல்ஸ் பிரைவட் லிமிடட் டின் நிர்வாக இயக்குனர்.
 5. சென்னை மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னிக்கின் நிர்வாக அறங்காவலர்.
 6. மதுரை வீ. கே.கே. சேரிட்டீஸ் குழுவின் நிர்வாக அறங்காவலர்
 7. மதுரையில் வீ. கே.கே. பிளே குரூப் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர்.
 8. மதுரை சியமளா ப்ரசிங் மெட்டல்பான்ட்ஸ் பிரைவட் லிமிடட்டின் தலைவர்
 9. மதுரை எம்.ஜி.எஸ் பேக்ஸ் பிரைவட் லிமிடட் குழுவின் தலைவர்.
 10. மதுரையில் பாரத் ஸ்கௌட்ஸ் அன்ட் கைட்ஸ் மாநிலத் தலைவராக பணியாற்றினார்.
 11. தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸின் உறுப்பினராக இருந்தார்
 12. தமிழ்நாடு ஆயிர வைஷ்யர் சங்கத்தில் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.
 13. மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
 14. மதுரை அழகர் கோயில் மற்றும் தூத்துக்குடி நவ திருப்பதி கோயில்களின் குழு உறுப்பினர் .
 15. பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் மதுரை மாவட்ட தலைவராக பணியாற்றினார்.
 16. மேற்கு ரோட்டரி சங்கம் மதுரை மாவட்ட தலைவராக (2002-2003 ) பணியாற்றினார்.
 17. தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் உறுப்பினாராக இருந்தார்.

 

 

5140total visits,2visits today