“விலைமதியாப் பெருவணிக நிறுவனங்கள்
தவமனைத்தும் நிறுவி வெற்றிப் புகழ் சேர்க்கும்
தமிழ் வணிகர் வி.கே.கே.”

1. வரலாறு ஆகும் வாழ்வு

“பகலெல்லாம் கண்ணால் பார்க்க வேண்டும்;

இரவெல்லாம் மனதால் நினைக்க வேண்டும்!”

பலமடங்கு தொழிலில் வெற்றி பெறவும், அவ்வாறு

பெறும் வெற்றியைப் பேணிக் காக்கவும் இதையே

தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்…”

 

1977-இல் சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப் பெற்ற வணிக நிறுவனப் புதுக்கணக்கு மங்கல நாளில் முதல் வரவு வைத்து வாழ்த்துக் கூற வந்த பெரியவர் ஒருவர் எடுத்துரைத்த மந்திர வாசகங்கள் இவை திருவாரூரில் பிறந்து, திரைகடல் தாண்டிவந்து, சிங்கப்பூரிலே, தமது சீரிய உழைப்பால் – புகழ்ச்சிங்காதனம் கொண்டவர் அப்பெரியவர். வணிக வணத்தால் ஈட்டிய வளர் நிதியத்தைக் கொண்டு, ஆலயப்பணிகள் ஆக்கித் தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங்கியவர் அப்பெருந்தகை.  அவரது பெயரைச் சொல்லும் முன்னரே, அவர் கோவிந்தசாமிப்பிள்ளை என்று கரைகடந்த தமிழர்சொல்வர். கன்னித் தமிழ்நாடும் சொல்லும்.

தாம் பிறந்த அதே திருவாரூர் மண்ணிலே பிறந்து, தம்மைப் போலவே துணிவோடு மலை நாடு வந்து, உழைப்பால் உயர்ந்துள்ள மற்றுமொரு மண்ணின் மைந்தரின் வணிக நிறுவனத் தொடக்க விழாவில் அமரர் கோவிந்தசாமிப் பிள்ளை அருளிய அமர வாசகங்கள் அவை.  இரவும் பகலும் மனதால் நினைத்துக் கண்ணால் பார்த்துப் பேண வேண்டும் என இவர் கூறியது அறிவுரை இல்லை, அதுவரை அவ்வாறே தம்மைப் போலச் செயல்பட்டுவந்த அன்பருக்கு நல்கிய பாராட்டுரை…

பெரியவர்கோவிந்தசாமிப் பிள்ளையின் பாராட்டுரைகளை அறிவுரைகளாகவே கருதி, மேலும் மேலும் சாதனைச் சிகரங்களை எட்டியவரின் வரலாறு இது  “ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டில் வாழ்ந்த சாதனையாளர்களின் வாழ்வுத் தொகுப்பே ஆகும்” என்பதற்கு இலக்கியமாக அமைந்த ஒருவரின் வாழ்க்கை ஏடு இது, ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையிலும் திருப்பங்கள் உண்டு, மேடு பள்ளங்கள் உண்டு.  அதுபோல பல்வேறு மேடு பள்ளங்களையும், வெற்றி தோல்விகளையும் தாண்டி, திருப்பங்களைக் கடந்து குறிக்கோள் விலகாமல் சென்ற ஒருவரின் இலட்சியப் பயணக்கதை இது.  “கற்பனைக் கதைளைப் படிக்கும் போது உள்ளம் சிறக்கும், ஊக்கம் பிறக்கும்” – என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எளிய, ஆனால் அரியசாதனைப் பட்டியல் இது.  துணிவைத் துணையாக்கிக்கொண்டு, நம்மாலும் முடியும் என நம்பிச் செயல்படும் எவரும் வாழ்வில் முன்னேற முடியும் எனப் பாடஞ் சொல்லும் பல்கலை நூல் இது.

தம் வாழ்க்கையை வறுமையிலே தொடங்கினாலும், மனத்திலே வறுமைப்பிணிக்கு மட்டும் இடம் கொடாமல், எதிர் நீச்சலிடத்துணிந்து நின்றால், எதையும் சாதிக்க முடியும் – எனத்திறந்த புத்தகமாக – பிறர் படிக்கக் கூடிய விரிந்த வித்தகமாக வாழ்ந்திடும் “வி.கே.கே.” யின் வாழ்க்கை நூல் இது.

வி.கே.கே.’ எனும் விலாசம் மலேசிய நாடு, சிங்கப்பூர், தமிழ்நாடு … ஆகியவற்றில் உள்ள வணிகர்களுக்கெல்லாம் அறிமுகமான ஒன்று.  வி.கே.கே. எனும் இம்மூன்றெழுத்து விலாசத்தால் பிரபலமான பெருவணிகர் வி.கே.கல்யாணசுந்தரம் “வேண்டியவரை விழுதுகளிறங்கிய ஆலமரத்தைப்” போல, தான் தொட்ட துறைகளை எல்லாம் துலங்கச் செய்தவர் வி.கே.கே.  ஐயாயிரம் வெள்ளி மட்டும் தன் கையில் இருந்தபோது.  அதையும் மறுநாள் கொள்முதல் பாக்கிக்குக் கொடுத்தாக வேண்டிய சூழல் இருந்தபோது, ஐந்துலட்சம் டாலர் மதிப்புள்ள தோட்டத்தை விலைக்கு வாங்கி, விரைவில் பணம் திரட்டிக் கடனைத் தந்து, இலாபமும் ஈட்டிய துணிச்சல்காரர் அவர்.  இரும்பை இரும்பே கூர்மைப் படுத்தித் தருவது போல, ஒரு தொழிலை அதனோடு தொடர்புடைய அறு தொழிலே கூர்மைப்படுத்திச் சீர்மை பெறச் செய்யும் என்பதைச் செயலாக்கி காட்டிய சாதனையாளர் அவர்.  பணம் ஒரு கருவி, அதனை உபயோகிக்கும் விதத்தில்தான் அதனுடைய பெருமையும், சிறுமையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பணத்திற்கே பெருமை தேடித் தந்து, தானும் பெருமையடைந்தவர் வி.கே.கே.

நம்பிக்கையோடு தொடங்கப்பெறும் காரியம் எவ்வளவு சிறியதாயினும் அது நாளடவில், எப்படியும் வெற்றி பெறும் என்பதை நம்பிக்கையோடு, நாணயமான தனது நடத்தையால் புலப்படுத்தினார்.  எந்தத் தொழிலைச் செய்தாலும் அதனைச் சிரத்தையோடும் உண்மையோடும் ஈடுபட்டுச் செய்து வந்தால், அத்தொழிலும் சிறக்கும், அதைச் செய்பவரும் சிறப்படைவார்-என்பதை அவர் வாழ்ந்து காட்டினார்.

இலாபம் ஈட்டுவது-அவருடைய ஒரே குதறிக்கோள், எளிமையும் இனியையும் அவரது இரு கண்கள், உழைப்பு, உறுதி, நிதானம் என்பன முப்பரிமாணப் பார்வைகள், கனிவு, துணிவு, அன்பு, பண்பு என்பன அவர் கொண்ட சதுரப்பாடுகள்.

இளமை சுமந்த வறுமையோடு, மலேயாவில பலசரக்குக் கடையில் சேர்ந்து-அவர் வளர்ச்சிப் பாதையில் எடுத்து வைத்த முதல் காலடி, அதே பலசரக்குத் தொழிலில் பங்குதாhராயும், உரிமையாளராயும வளர்ந்தது-இரண்டாம் நடை, தோட்டத் தொழிலில், தோட்டங்களை வாங்கி விற்பதில் அவர் பெற்ற அதிர்~;ட வெற்றிகள் முழு நிலவாக வளர்ந்து மூன்றாம் பிறைகள், மலேயாவில், இந்தியாவில் வணிக நிறுவனங்களை உருவாக்கி உயர்;த்தியமை முழு மதியாக ஒளிவீசச் செய்த வெற்றிக் கதிர்கள்.  உறுபொருளாலும் வரு நிதியாலும் பல்வேறு அறப்பணிகளுக்கு வகுத்தளித்த வள்ளன்மைகள்-அவர் வாழ்வெனும் மலைச் சிகரத்தின் மணி முடிகள்.

ஆடிவாரத்தின் தின்று பெரிய மலையைப் பார்த்தால் இதில் எப்படி ஏறுவது எனும் பிரமிப்பு ஏற்படும், மலைச் சிகரத்திலிருந்து அடிவாரத்தைப் பார்க்கும் போது-இதில் எப்படி இறங்குவது எனும் அச்சம் ஏற்படும்.  கல்யாணசுந்தரர் தொழில் முயற்சிகளில், மலைச் சிகரத்தைப் பற்றி ஏறுவது போல-ஏற்றம் கண்டு, பிறருக்கும் பிரமிப்பையூட்டினார்.  ஈட்டியதெல்லாம் இதன் பொருட்டு எனக் காட்டும் கைத்திற முதலீடுகளில்-அடிவாரத்தைத் தொடும் துணிவால் பிறர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினார்.  ஒரு சொத்தை இவர் விலை பேசுகிறார் என்றால் அந்த வினாடியே அச்சொத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விடும் – எனும் அளவுக்குக் கைராசிக்காராக விளங்கினார்.

வறுமைச் சூழலிலிருந்து  – வாழ்க்கைப் படிகளில் உயர்ந்தவர்களின் வரலாறுகள் பல உண்டு.  நம் தமிழ் நாட்டுத் தொழிலதிபர்களில் பலரைச் சான்று காட்ட முடியும்.  சைக்கிள் கடையில் பழுது பார்க்கும் பணியிலிருந்து தொடங்கிய டி.வி.சுந்தரம் ஐயங்கார்… பெரியதொரு போக்குவரத்துத் தொழிலதிபராக உயர்ந்தார்.  புழைய மோட்டார் சைக்கிளை வாங்கிப் பிரித்துப் பிரித்துப் பழகிய ஜி.டி.நாயுடு “இருபதாண்டுகள்(கல்வி) அறிவு பெறுதல், இருபது ஆண்டுகள் உழைப்பால் உயர்தல்,” எனும் லட்சிய்த்தை எட்டிய மேதையாக, பல்தொழில் வித்தகராக விளங்கினார்.  சுர்பத் காய்ச்சி விற்கும் சிறுதொழிலைச் சிரத்தையோடு அடி எடுத்து வைத்த காரக்குடி ஆறுமுகம் பிள்ளை “தங்கபுஸ்பம்” புகையிலை நிறுவனத்தால் பொருளீட்டிப் புகழும் பெற்றார்.  எளிய பின்னணியில் வளர்ந்த கோவைக் கிரு~;ணப்பச் செட்டியார் “அசோகா” பாக்கு வணிகத்தில் அமோக மன்னர் போலப்புகழ்மணம் பரப்பினார், சாதாரணச் சூழலில்-வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கக் கற்ற கும்பகோணம் டி.எஸ்.ஆர்  அந்த விலாசத்தை-“கோகுலமாகக்”  கொடி வீசிப் பறக்கச் செய்தார், கிராமப்புறங்களில் மூக்குப் பொடி வியாபாரத்தோடு – தன் தந்தையின் சுவடு பற்றி நடந்த் திண்டுக்கல் முத்தையா பிள்ளை, கருப்பட்டியோடு வாசனைப் பொருள் கலந்த திண்பண்டப் புகையிலையைப் பிரபலப்படுத்தி – ‘அங்கு விலாசை” – அகிலம் அறியச் செய்தார்.  முந்நூறு ரூபாய் கடனாகப் பெற்றுத் தொழிலைத் தொடங்கினார்.  எங்கும் காணாவகையில் அங்கு விலாசை உயரச் செய்தார்.

தமிழ்நாட்டுச் சாதனையராகப் பலரைப் பட்டியலிட முடியும் என்பது ஒரு புறம் இருக்க, மலேய நாட்டில் பிழைக்கத் தமிழ்த் தாயகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றவர்களிலும் – விரிந்த மரமாக வளர்ந்தவர்களின் வரலாறுகள் உண்டு.

வியாபாரம் என்பது வருவாயை எண்ணிக் கூட்டி, இருப்பைக் கட்டி, இரும்புப் பெட்டியினை நிறைப்பதல்ல.  ஈட்டலையும் ஈகையையும் உள்ளிட்ட ஒன்று இருப்புப் பெட்டியை நிறைப்பது போல, இதரர் இதயத்தையும் நிறைவிக்க வேண்டிய ஒன்று – என வாழ்ந்தவர் – மலேசிய, – பினாங்கு – “பரக்கத் ஸ்டோர்” அதிபர் அபுபக்கர், உழைப்பால், மிட்டாய் தொழிலில் ருசி கண்டவர் – சுவை பெருக்கியவர் – தமிழ்நாட்டுக் கூத்தாநல்லூரைச் சேர்ந்த இத்துணிச்சல்காரர்.

இவர்களைப் போல – கல்யாணசுந்தரமும் – சாதனையாளார் வரிசையில் நிற்கிறார், பெருமையோடு நிற்கிறார், பிறருக்குப் பேருவகை தரும் வகையில் பயன் தந்து நிற்கிறார்.

ஒருவருடைய பெருமையினை மூன்று அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அவருடைய தோற்றத்தில் எளிமை, செயலில் மனிதத் தன்மை, வெற்றியில் ஆணவமின்மை.

இம்மூன்று அறிகுறிகளையும் அருங்குணங்களாகக் கொண்டுள்ளார்.  வறுமையோடு வளர்ந்ததை என்றும் மறவாதவர் ஆனதால் வளமையாக வாழும் போதும் செம்மையோடு விளங்குகிறார்.  வணிகப் பெருமக்களில் வாகை சூடியவர்களுக்கு – ‘எட்டி’ எனும் பொற்பூவைப் பழந்தமிழரசர் வழங்கியமைகோல, மலேசிய நாட்டில் வாணிகப் பெருமை சேர்ந்தமைக்காக அந்த நாட்டின் பேரரசால் ‘கே.எம்.என்.” எனும் சிறப்பு விருதளிக்கப் பெற்றமையை எப்போதும் நினைக்கிறார்.  எல்லா வணிகரும் இத்தகைய சிறப்பிற்குத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைவூட்டுகிறார்.

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை’ எனும் தமிழ் மொழிக்கேற்ப வாணிக வாழ்வைத் தலைமேற் கொண்ட ஆயிரவைசிய மரபில் பிறந்து – தம் உழைப்பால் – பிறந்து சமூகத்தையே பெருமைப்படச் செய்துள்ளார்.

ஆயிரமாயிரம் கிளைகளாக விரிந்த ஆயிரவைசிய ஆல மரத்தில் விழுமிய விழுதாக நின்றார்.  விழுதே நாடடைவில் அடிமரமாக ஆக்கம் பெறும் வகையில் வாழ்ந்து காட்டினார், வாகை சூடினார்!.

  
‘திருக்குறட்செம்மல்’ ந.மணிமொழியன். எம். ஏ.,
மேலாண்மை இயக்குநர்,
நியூ காலேஜ் ஹவுஸ்,
மதுரை – 1
 
 
 

599total visits,1visits today